பெண் எம்.பி., உடன் இந்திய வீரர் ரிங்கு சிங் நிச்சயதார்த்தம்?
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் எம்.பி.யை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 25 வயதே ஆன பிரியா சரோஜ், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, உத்தரப்பிரதேச மாநிலம் மச்லிஷாஹர் (Machhlishahr) தொகுதியில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஆக உள்ளார். இந்நிலையில் ரிங்கு சிங்கும், பிரியா சரோஜூம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் நிச்சயதார்த்தம் குறித்து இருதரப்பில் இருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
