"குடியரசுத் தலைவர் மீது தனது தாய்க்கு அதிகபட்ச மரியாதை இருக்கிறது..!" - பிரியங்கா காந்தி பதிலடி
குடியரசுத் தலைவர் குறித்த சோனியாவின் கருத்து திரித்து கூறப்படுவதாக அவரது மகளும், காங்கிரஸ் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், குடியரசுத் தலைவர் மீது தனது தாய்க்கு அதிகபட்ச மரியாதை இருப்பதாக தெரிவித்தார். குடியரசு தலைவர் இவ்வளவு நீளமான பேச்சை படித்து, களைத்துப் போயிருப்பார் பாவம், என்று எளிமையாக சொல்லியிருப்பதாக விளக்கம் அளித்தார். மேலும், நாட்டை பாழ்படுத்தியதற்கு பாஜகதான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Next Story
