புத்த தலைவர்களுடன் பிரதமர் உரை : மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி

சர்வதேச புத்த மத தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை தாண்டி பல்வேறு பிரச்சினைகளை மனித குலம் சந்தித்துள்ளது என்றார்.
புத்த தலைவர்களுடன் பிரதமர் உரை : மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி
Published on

புத்த தலைவர்களுடன் பிரதமர் உரை : மனிதனின் சுயநல வாழ்க்கையால், பருவநிலை மாற்றம் - பிரதமர் மோடி

சர்வதேச புத்த மத தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை தாண்டி பல்வேறு பிரச்சினைகளை மனித குலம் சந்தித்துள்ளது என்றார்.மத்திய கலாச் சாரத்துறை அமைச்சகம், சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து, உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட புத்த மத தலைவர்களை ஒன்றிணைத்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்..காணொலி வாயிலாக நடந்தக் கூட்டத்தில், பொருளாதார ரீதியில், கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், கடந்த ஆண்டைவிட தற்போது கொரோனா குறித்து நல்ல புரிதல் உள்ளது என்றார். மனிதனின் தீவிர முயற்சியால், ஓராண்டுக்குள் தடுப்பூசி வந்தது என்ற பிரதமர் மோடி, மருத்துவர், செவிலியர், உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். கொரோனாவைபோல் மனிதன் சந்திக்கும் மற்றொரு சவால், பருவநிலை மாற்றம் என்ற பிரதமர் மோடி, மனிதனின் பொறுப்பற்ற சுயநலமான வாழ்க்கையே அதற்கு காரணம் என்றார்.பருவநிலை மாற்றத்தால் ஆறுகள், காடுகள் ஆபத்தில் உள்ளது, பனிப்பாறைகள் உடைகின்றன. அதோடு பயங்கரவாதமும் பெரும் சவால் என பிரதமர் உரையாற்றினார்.

X

Thanthi TV
www.thanthitv.com