இந்தியாவுக்கு பதில் பாரதம் என்ற வார்த்தையைப் பயன் படுத்திய பிரதமர்

x

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பாரபட்சமற்ற வலுவான நீதித்துறை அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்று வரும் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டிலேயே முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் சட்ட நடைமுறைகள், எல்லை தாண்டிய வழக்குகளில் உள்ள சவால்கள், சட்ட தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் சட்டம் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளது. மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி,

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, வீர் சாவர்க்கர், அம்பேத்கர், லோகமானிய திலகர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் முக்கிய பங்காற்றி இருப்பதாகவும், விடுதலை போராட்டத்தில் பங்கு பெற பல வழக்கறிஞர்கள் தங்களுடைய பணியை துறந்ததாகவும் பாராட்டு தெரிவித்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்... உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், முடிந்த அளவு எளிதாகவும், இந்திய மொழிகளிலும் சட்டங்களை வரையறுக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்... மேலும், 2047ல் வளர்ச்சி அடைந்த தேசமாக இந்தியாவை உருவாக்க பாரபட்சமற்ற, வலுவான, சுதந்திரமான நீதித்துறை அவசியம் என அவர் வலியுறுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்