பிரதமர் மோடியின் பயணம்.. திடீர் தேதி மாற்றம்
பிரதமர் மோடி வருகின்ற செப்டம்பர் 13 மற்றும் 14ஆம் தேதி அசாம் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். முன்னதாக செப்டம்பர் எட்டாம் தேதி பிரதமர் மோடி அசாம் வர இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கவுகாத்தியில் பாரத ரத்னா டாக்டர் பூபன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகரில் நாட்டின் முதல் பயோ-எத்தனால் ஆலையை தொடங்கி வைக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
Next Story
