PM MODI ||3 நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள் அரசு முறைப் பயணமாக, கனடா, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொள்கிறார். முதல் கட்டமாக, ஜூன் 15ஆம் தேதி சைப்ரஸ் நாட்டிற்கு செல்லும் அவர், அங்கிருந்து ஜூன் 16ம் தேதி கனடாவுக்கு செல்கிறார். கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் அங்கு நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, ஜூன் 18-ஆம் தேதி பிரதமர் மோடி குரோஷியாவுக்குச் செல்கிறார். பிரதமர் மோடி, கடந்த மாதம், குரோஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலால், பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
Next Story
