

மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அயோத்தி தீர்ப்பு நீதித் துறையின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றார். இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்ற அவர் பாரதியாரின் முப்பது கோடி முகமுடையாள் கவிதையை மேற்கொள் காட்டி நமது நாட்டுக்கு பல முகங்கள் பல மொழிகள் இருந்தாலும் அனைத்து மக்களின் சிந்தனையும் ஒன்றே எனக் கூறினார். வரும் 26ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்பு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இது மிகவும் சிறப்பான தருணம் என்று பிரதமர் பெருமிதமாக கூறினார். இதனிடையே, பள்ளிகள் தோறும் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.