தலாய் லாமாவின் பிறந்தநாள் - வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், 140 கோடி இந்தியர்களுடன் சேர்ந்து மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் ஒழுக்கத்தின் நீடித்த அடையாளமாக தலாய் லாமா இருந்து வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார். நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Next Story