

நாளை மறுநாள் நடைபெறும் குவாட் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்.மாநாட்டில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்துக் கொள்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் மட்டத்தில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையென வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார். மேலும், பைடன் அரசு சீன விவகாரம் உள்பட பலவிதமான பிரச்சினைகளை பேசியுள்ளது என்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுடன் நெருங்கி பணியாற்றவே முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.