

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு, அறிவித்ததற்கு, காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக, அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய அவர்,
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர் கொள்ளும், சிரமங்கள் குறித்து பேசியதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் இதர துறைகளுடன் இது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டதாக குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் மத்திய சுற்று சூழல் நலத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்திற்கு உடனடியாக தடையில்லா சான்று வழங்கியதாகவும் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.