

குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், லடாக் யுனியர் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று நடைபெறும் புத்த மத விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். இன்று மறுநாள் டிராஸ்(Drass) பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவு சின்னத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்துகிறார். குடியரசு தலைவரின் வருகையையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.