ரூ.18 கோடி சர்ச்சை... ``வெட்கக் கேடானது..'' ப்ரீத்தி ஜிந்தா Vs கேரள காங்., - மோதல் பின்னணி
வங்கிக் கடன் குறித்து கேரளா காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு, நடிகை ப்ரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். ப்ரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள பக்கங்களை பாஜகவிடம் ஒப்படைத்ததால், கடந்த வாரம் திவால் நிலைக்கு சென்ற வங்கியில், அவர் வாங்கிய 18 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக, கேரள காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளித்துள்ள நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தனது சமூக வலைதள பக்கங்களை, தான் மட்டுமே கையாண்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார். தனது கடனை யாரும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி அவதூறு பரப்புவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள ப்ரீத்தி ஜிந்தா, இதுபோன்று போலி செய்திகளை காங்கிரஸ் பரப்புவது வெட்கக் கேடானது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
