புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரவீன் குமார் பதவி ஏற்றுக்கொண்டார். நீதிபதி பிரவீன் குமாருக்கு கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விஜயவாடா நகரில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அம்மாநில மந்திரிகள் நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றனர்.