மன்னிப்பு கோரும் விவகாரம்: "உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பது போலாகிவிடும்"- மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்து

உச்சநீதி மன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே விலையுயர்ந்த பைக்கின் மீது அமர்ந்திருந்த புகைப்படம் குறித்து பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.
மன்னிப்பு கோரும் விவகாரம்: "உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பது போலாகிவிடும்"- மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்து
Published on
உச்சநீதி மன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே விலையுயர்ந்த பைக்கின் மீது அமர்ந்திருந்த புகைப்படம் குறித்தும் உச்சநீதிமன்றத்தின் நான்கு முன்னாள் நீதிபதிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ள பிரசாந்த் பூஷன் அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரினால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது போலாகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்,. மேலும் தனது மனசாட்சியையும், தான் மிகுந்த மதிப்பு வைத்துள்ள உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பது போலாகிவிடும் எனவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com