பிரபல யூடியூபர் அதிரடி கைது

x

லைக்ஸ்களுக்காக யூடியூபில் பெண்களை ஆபாசமாக பேசி வந்தவர் கைது

புதுச்சேரியை சேர்ந்த பெண்ணை யூடியூப்பில் ஆபாசமாக பேசிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த யூடியூபரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி, சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் குறித்து வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமான மற்றொரு யூடியூப்பரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற துர்க்கை ராஜ், தனது யூடியூப் சேனலில் மகாலட்சுமியின் புகைப்படத்தை வெளியிட்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போது, லைக்ஸ்களுக்காக இதுபோல் பல பெண்களை தனது யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசுவதை துர்க்கை ராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது


Next Story

மேலும் செய்திகள்