புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகம் 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான பருவ கட்டணத்தினை இரு மடங்காக உயர்த்தி சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பினை புறக்கணித்து நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.