மெத்தையை சுருட்டி படுத்திருந்த அரசியல்வாதி -திடீரென வந்து திகிலடைய வைத்த போலீஸ்

x

உத்தரப்பிரதேசத்தில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வீட்டில் உள்ள பரணில் மெத்தையை சுருட்டியபடி படுத்திருந்த சமாஜ்வாதி கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் காயிஷ் கான் என்பவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது அமைதியை பாதுகாக்கும் வகையில், அவரை ஆறு மாதங்களுக்கு மாவட்டத்திற்குள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். எனினும், மாவட்டத்தை விட்டு வெளியேறாத காயிஷ் கான், சாதர் பகுதியில் உறவினர் ஒருவரது வீட்டில் சொகுசாக வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர், அவரை கைது செய்ய சென்றனர். அப்போது, வீட்டில் உள்ள பரணில் மெத்தையை சுருட்டியபடி படுத்திருந்த காயிஷ் கானை கீழே இறக்கி போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்