மக்களுக்கு பயந்து தலைதெறிக்க போலீஸ் ஓட்டம் - பரவும் வீடியோ
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம், பத்மநாபபுரம் பகுதியில் ரோந்து வாகனத்தில் அமர்ந்து 2 காவலர்கள் மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர்களை பொதுமக்கள் சிறைபிடிக்க முயன்ற நிலையில், ரோந்து வாகனத்தில் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய 2 காவலர்களில் ஒருவர் ஏற்கனவே இதேபோல, பணி நேரத்தில் பலமுறை மது அருந்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர் எனத் தெரியவந்துள்ளது. தற்போது, இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Next Story
