திருப்பதி மலையில் ஓய்வு பெற்ற காவலர் மனைவியுடன் தற்கொலை
திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தானத்தின் தங்கும் அறையில் ஓய்வு பெற்ற ஆந்திர தலைமை காவலர் மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் திருப்பதி மலையில் ஓய்வு பெற்ற தலைமை காவலர் ஸ்ரீநிவாசலு தங்கியிருந்த நிலையில்,
மகனும் மருமகளும் ஷாப்பிங் செய்ய சென்றபோது, ஸ்ரீநிவாசலுவும் அவரது மனைவி அருணாவும் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் தெரிய வராத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
