Police | Viral Video | பெண் தோழியுடன் இருந்த வனக் காவலரை தாக்கிய உள்ளூர் இளைஞர்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண் தோழியுடன் இருந்த வன காவலரை உள்ளூர் இளைஞர்கள் கடுமையாக தாக்கி, நடனம் ஆட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூர் வனப்பகுதியில் வன காவலர் ஒருவர் தனது பெண் தோழியுடன் இருந்துள்ளார். அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள், வன காவலரையும், அந்த பெண்ணையும் கடுமையாக தாக்கினர். தொடர்ந்து அந்த இளைஞர்கள் வன காவலரை நடனம் ஆட வைத்து அட்டகாசம் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வன பாதுகாவலருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக, சூரஜ்பூர் மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்
