Police | Uttar Pradesh | Gun பாயிண்டில் ஆடைகளை கழட்டி அட்ராசிட்டி.. BP ஏற்றும் உ.பி. சம்பவம்
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் காவல்துறை அதிகாரியை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி துப்பாக்கியை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் மவானா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சத்லா கிராமத்தில் பாரத்வீர் என்ற நபர் அளித்த புகாரின் அடிப்படையில், சிலரை கைது செய்ய காவல் துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவர்களது கூட்டாளிகளும் சேர்ந்து காவல்துறையினரை சூழ்ந்துகொண்டனர்.
மேலும், சுனில் என்ற காவலரை தாக்கி அவரது சீருடையைக் கிழித்து அரை நிர்வாணப்படுத்தியது மட்டுமன்றி, அவரது துப்பாக்கியையும் பறித்தனர். காவல்துறை வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனிடையே, மற்றொரு அதிகாரி பெரிய படையுடன் அங்கு சென்று, போலீசாரை பாதுகாப்பாக மீட்டு, தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தார்.
Next Story
