தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீஸ்.. தள்ளுமுள்ளு.. களேபரமான போராட்ட களம்
தலைமை தேர்தல் அலுவலகம் முற்றுகை - தண்ணீர் பீய்ச்சி அடிப்பு
கேரளாவில் தலைமை தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தலிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி, தலைமை தேர்தல் அலுவலகத்தை நோக்கி கேரள மாநில இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். தலைமை தேர்தல் அலுவலகம் முன்பு ஒன்று கூடி முழக்கங்களை எழுப்பியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தள்ளி, உள்ளே நுழைய முயன்றனர். இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.
Next Story
