UP Incident | யூடியூபருடன் சேர்ந்து SI செய்த கொடூரம் |கழிவறைக்குச் செல்ல வந்த சிறுமிக்கு நேர்ந்த கதி
உ.பி.யில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காவல் துணை ஆய்வாளர்
உத்தரப்பிரதேசத்தில், தனது நண்பருடன் சேர்ந்து, 14 வயது சிறுமியை காரில் கடத்தி, காவல் துணை ஆய்வாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி, இரவில் கழிவறைக்குச் செல்ல தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது காவல் துணை ஆய்வாளர் அமீத்குமார் மவுரியா என்பவர், தனது நண்பரும், யூடியூபருமான ஷிவ்பரன் யாதவ் என்பவருடன் சேர்ந்து காரில் கடத்தியுள்ளார். பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, சிறுமியை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஷிவ்பரன் யாதவை போலீசார் கைது செய்ததுடன், தலைமறைவாக உள்ள துணை ஆய்வாளர் அமீத்குமாரை தேடி வருகின்றனர்.
Next Story
