போலீஸ் அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை - பெண் டாக்டர் தற்கொலை
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பணி புரியும் பெண் மருத்துவர் ஒருவர், தன்னை காவல்துறை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைகளில் குறிப்பெழுதி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் காவல்துறை துணை ஆய்வாளராக பணிபுரியும் கோபால் பதானே என்பவர் தன்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பிரசாந்த் பங்கர் என்ற மற்றொரு காவல்துறை அதிகாரி தன்னை மனரீதியாக சித்திரவதை செய்து வந்ததாகவும் உயிரிழந்த பெண் மருத்துவர் தன் கையில் எழுதியுள்ளார். இது குறித்து டிஎஸ்பிக்கு புகார் கடிதம் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் பெண் மருத்துவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story
