Karnataka CM | ஆக்ரோஷமாக எட்டி உதைக்க பாய்ந்த போலீஸ்.. கர்நாடக முதல்வர் வரும்போது பரபரப்பு
கர்நாடகாவில் பைக் ஓட்டுநரை உதைக்க முயன்ற போலீஸ் அதிகாரி
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா வாகனத்திற்கு வழி ஏற்படுத்துவதற்காக பொதுமக்களிடம் போலீசார் அத்துமீறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மைசூரு அருகே சுட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று திரும்பிக்கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மைசூர் காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன் பாலதண்டி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பைக் ஓட்டுநர் ஒருவர் கோட்டை கடக்க முயன்றதால் ஆத்திரமடைந்து அவரை காலால் எட்டி உதைக்க முயன்றார். இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
Next Story
