கிளாஸுக்குள் புகுந்து... பேராசிரியர் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி... கும்பல் நிகழ்த்திய பயங்கரம்... அதிர்ந்த மாணவர்கள்

மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி பேராசிரியர் மீது மிளகாய்ப்பொடியைத் தூவி தடியால் மாணவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் JHPG அரசு கல்லூரியில் சமஸ்கிருத துறை துணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் நீரஜ் தாகத்....மாணவர்களுடன் இவர் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென புகுந்த 7 பேர் கொண்ட மாணவர்கள் குழுவினர், நீரஜ் தாக்கத்தின் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி, தாங்கள் கொண்டு வந்திருந்த தடியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த நீரஜ் தாக்கத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே, தன்னை தாக்கியது முன்னாள் மாணவர் அன்னு தாக்கூர் உள்ளிட்டோர் என்றும், ஏற்கனவே தங்களுக்குள் பிரச்சினை இருப்பதால் இந்த தாக்குதல் நடந்திருப்பதாகவும் நீரஜ் தாக்கத் கூறியுள்ளார். அவரளித்த புகாரின் அடிப்படையில் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com