ஹெல்மெட் போடாமல் வந்த இளைஞருக்கு போலீஸ் கொடுத்த நூதன தண்டனை
காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞருக்கு, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் நூதன தண்டனையை போலீசார் வழங்கினர். அந்த இளைஞரை ரோந்து பணியில் இருந்த மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தடுத்து நிறுத்தியும், அவர் விசாரணைக்கு பயந்து நிற்காமல் சென்று விட்டார். அவரை கண்டுபிடித்து அழைத்து வந்த போலீசார், அவருக்கு நூதன தண்டனை வழங்கினர். அதன்படி, அந்த இளைஞர், காரைக்காலில் காத்தாபிள்ளை சிக்னலில் பதாகை ஏந்தி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
Next Story
