UP காரில் துடித்த பஞ்சாயத்து தலைவர் - `துப்பாக்கி’யால் உயிர்களை காப்பாற்றிய போலீஸ் தம்பதி
UP காரில் துடித்த பஞ்சாயத்து தலைவர் - `துப்பாக்கி’யால் உயிர்களை காப்பாற்றிய போலீஸ் தம்பதி
#uttarpradesh #police #couple #accident
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் அருகே பயங்கர விபத்தில் காருக்குள் சிக்கிய 5 பேரை காவலர் தம்பதி துரிதமாக செயல்பட்டு மீட்டனர். லக்னோவில் இருந்து நொய்டா சென்ற பார்ச்சூனர் கார், தால்கிராம் அருகே கனமழை மற்றும் அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு எதிர்புற சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. காரில் சுல்தான்பூர் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் உஷா சிங் உள்ளிட்ட 5 பேர் சிக்கிக் கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காவலர் அமித் தேவதியா மற்றும் அவரது மனைவி அர்ச்சனா சிங், காரின் கதவுகள் திறக்காததால், அமித் தேவதியா துப்பாக்கியின் பின்பகுதியால் கண்ணாடிகளை உடைத்து, 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
