மம்தாவுக்கு எதிராக முழக்கம் - மோதலால் பதற்றம்...

மத்திய அமைச்சர் அலுவாலியா தலைமையில் நடைபெற்ற பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மற்றும் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு.
மம்தாவுக்கு எதிராக முழக்கம் - மோதலால் பதற்றம்...
Published on
மேற்கு வங்க மாநிலம் பத்பாரா பகுதியில் கடந்த வியாழக்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சம்பவம் நடந்த பத்பாரா பகுதிக்கு மத்திய அமைச்சர் அலுவாலியா மற்றும் பாஜக நிர்வாகிகள் 3 பேர் அங்கு சென்றனர். இதையடுத்து அங்கு அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்கள் தொண்டர்களுடன் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் பேரணியாகச் சென்றபோது, மேற்கு வங்க முதல்வர் மற்றும் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸாரும் எதிர் கோஷம் எழுப்பியதால் மோதல் உருவானது. இதையடுத்து போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இருந்தாலும் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com