Mylapore | மயிலை கபாலீஸ்வரர் கோயில் முன்பு சாமி கும்பிட்ட மாணவிக்கு நேர்ந்த கொடுமை

x

சென்னை மயிலாப்பூர் பகுதியில், கோயிலில் வழிபட சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 16ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வர‌ர் கோயிலுக்கு முன்பு தரிசனம் செய்துகொண்டிருந்த கல்லூரி மாணவியை, ஒருவர் பின்தொடர்ந்து சென்று தவறாக உரசியதாக கூறப்படுகிறது. அந்த மாணவி கேள்வி கேட்டபோது, அவதூறான வார்த்தைகளை பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகார் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருவல்லிக்கேணியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்