இந்தியா
Police | AI Summit | CBSE | Exam | "தலைநகரில் மாற்றம்.." - போலீசார் முக்கிய அறிவிப்பு
"தலைநகரில் மாற்றம்.." - போலீசார் முக்கிய அறிவிப்பு
டெல்லியில் 16ஆம் தேதி முதல் 20 வரை சர்வதேச அளவிலான "இந்தியா ஏஐ உச்சிமாநாடு" நடைபெற உள்ளது. இதேசமயம், 17ஆம் தேதி முதல் CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தொடங்குகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு செல்லவும், மாற்றுப் பாதைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உச்சிமாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
