கோயில் பிரசாதம் உயிரிழப்பு 14-ஆக உயர்வு

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் கோவில் பிரசாதத்தை உட்கொண்ட 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கோயில் பிரசாதம் உயிரிழப்பு 14-ஆக உயர்வு
Published on
கர்நாடகா மாநிலம் பெலகாவி அருகே உள்ள கி​ச்சூகட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த வெள்ளிக்கிழமை கோபுரம் கட்டுவதற்காக பூ​மிபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தை உட்கொண்ட 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 125 பேர் ஆபத்தான நிலையில் பெலகாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ஓரிரு நாளில் உண்மை தெரியவரும் என நம்பிக்கை தெரிவித்தார். மனிதர்கள் உயிருக்கு ஆபத்தான பொருட்கள் பிரசாதத்தில் கலந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் தொடர்புள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரான எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com