புதிய நாடளுமன்ற கட்டடம்:"பழமையும், புதுமையும் கலந்த கட்டடமாக இது அமையும்" - பிரதமர் மோடி

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் சபை நடந்ததற்கான ஆதாரங்கள், சென்னை அருகே உத்திரமேரூரில், கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதிய நாடளுமன்ற கட்டடம்:"பழமையும், புதுமையும் கலந்த கட்டடமாக இது அமையும்" - பிரதமர் மோடி
Published on

புதிய நாடாளுமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய மைல் கல் என்று கூறினார். பழமையும், புதுமையும் கலந்த கட்டடமாக இது இருக்கும் என்று கூறிய பிரதமர், சுதந்திர இந்தியாவில் இது உருவாக்கப்பட உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மக்கள் தாராளமாக வந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச சிறப்பான இடமாக அமையும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

சென்னைக்கு அருகே உத்திரமேரூரில், மக்கள் சபை நடந்தததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றி அதில் விரிவாக கூறப்பட்டுள்ளதாகவும் கூறிய பிரதமர், மக்களாட்சி முறை, வாழ்க்கை தத்துவமாக உள்ளதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com