"ED கைப்பற்றிய பணம் ஏழைகளுக்கு மட்டுமே" போன் காலில் சொன்ன மோடி

ஊழல் வாதிகள் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்...

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பல்வேறு வேட்பாளர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடி வருகிறார்.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிடும் ராஜ் மாதா அம்ரிதா ராயுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பிரதமர்,

மேற்கு வங்கத்தில் பொது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப் பட்ட பணம் மற்றும் அமலாக்கத்துறை கைப்பற்றிய பணம் ஏழை மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய சட்ட பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒருபுறம் பாஜக நாட்டில் உள்ள ஊழலை அகற்ற உறுதி பூண்டு இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, மற்றொரு புறம் ஊழல்வாதிகள் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்...

X

Thanthi TV
www.thanthitv.com