

கொரோனா சிக்கலை தொழிலுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின், 95வது ஆண்டு விழா கூட்டத்தில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரை இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா கொரோனா மட்டுமின்றி, வெட்டுக்கிளி தாக்குதல், புயல் போன்ற சவால்களையும் இந்தியா சந்தித்து வருவதாகவும், இந்த அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையை தருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒற்றுமையும், வலிமையும் தான் சவால்களை சந்திப்பதற்கான உற்சாக மருந்து என்று தெரிவித்துள்ள அவர், கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.