PM Modi Speech | WHO உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்
பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்ற நிலையில், இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் , டெல்லியின் பாரத் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாரம்பரிய மருத்துவ முறைகளில் யோகாவும் அடங்கும் என்று தெரிவித்தார்.
மேலும் , அவர் யோகாவை ஊக்குவிப்பதற்காக சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பிரதமரின் விருதை வழங்கி பாராட்டினார்.
டெல்லியில் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலக வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மேலும், டெல்லியில் WHO-தென்கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலக வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் பல முக்கிய ஆயுஷ் திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆயுஷ் துறைக்கான முதன்மை டிஜிட்டல் போர்ட்டலையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதோடு, யோகா பயிற்சி குறித்த உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அறிக்கையையும், புத்தகத்தையும் வெளியிட்ட பிரதமர் மோடி,
அஸ்வகந்தா குறித்த நினைவு அஞ்சல் முத்திரையையும் வெளியிட்டார்
