பிரதமர் மோடி ரோடு ஷோ - மலர் தூவி வரவேற்ற கர்னல் சோபியாவின் குடும்பத்தினர்
பிரதமர் ரோடு ஷோ - கர்னல் சோபியா குரோஷி குடும்பத்தினர் வரவேற்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு, கர்னல் சோபியா குரோஷியின் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, வழிநெடுகிலும் பொதுமக்களை பார்த்து கையசைத்து உற்சாகமடைந்தார். பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம், மோடி... மோடி... என்று பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். அதே நேரத்தில், ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றிய கர்னல் சோபியா குரோஷியின் குடும்பத்தினர், பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடியை வரவேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக சோபியா குரோஷியின் சகோதரி ஷைனா சன்சரா தெரிவித்தார்.
Next Story
