India UAE Relationship | பிரிக்ஸ் மாநாட்டிற்கு நடுவே அபுதாபி இளவரசருடன் PM மோடி சம்பவம்

பிரிக்ஸ் மாநாட்டிற்கு நடுவே அபுதாபி இளவரசருடன் PM மோடி சம்பவம்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் மோடியும், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமதும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்..

இந்தியா-யுஏஇ இடையேயான விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருநாடுகளின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு குறித்தும், பிரதமர் மோடியும், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமதும் விரிவாக விவாதித்தனர்...

​குறிப்பாக, ஒடிசாவில் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிரம்மாண்டமான அலுமினிய திட்டத்தை அமைக்க யுஏஇ-யின் ஐ.எச்.சி. (IHC) நிறுவனம் முன்வந்துள்ளதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்தார். மேலும், பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி மற்றும் புதிய தொழில்நுட்பத் துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

#brics #modi #abudhabiprince #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com