கேரளா வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிரதமர்

கேரளா வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிரதமர்

கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Published on

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் நேற்று திருவனந்தபுரம் சென்றார். இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கொச்சி சென்ற பிரதமர், வெள்ள பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி விமானத்தில் இருந்து ஆய்வு செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com