சித்தகங்கா மட தலைமை குருக்கள் சிவக்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த சிவக்குமார், மருத்துவம் மற்றும் கல்விச் சேவையில் சிறந்த பங்களிப்பை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ள குடியரசுத் தலைவர், சிவக்குமாரின் மறைவுக்கு இரங்கலும், அவரது பக்தர்களுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார். இதேபோல், இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அளவிட முடியாத அளவுக்கு மதகுரு சிவக்குமார் சமூகப் பணி செய்திருப்பதாக கூறியுள்ளார். சிவகுமார் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.