PM Modi | நாளை தமிழ்நாடு வரும் PM.. 3 to 4 மணி மாறப்போகும் பிரேக்கிங்..
பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயண விவரம் வெளியாகியுள்ளது...
ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகைதரவுள்ளார்...
அன்று பிற்பகல் 12.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் புறப்படும் பிரதமர், பிற்பகல் 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்க உள்ளனர்...
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் சென்றடையும் பிரதமர், அங்குள்ள ஹெலிபேட் தளத்திலிருந்து சாலை மார்க்கமாக சுமார் 5 நிமிடங்கள் பயணித்து பொதுக்கூட்ட மேடையை அடைகிறார். மாலை 3 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஒரு மணி நேரம் பங்கேற்று உரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், மாலை 4 மணிக்கு மதுராந்தகத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் புறப்படுகிறார்.
