

பாரதிக்கு பிரதமர் மோடி புகழ் அஞ்சலி - பிரதமர் மோடி தமிழில் டுவீட்
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100ஆவது நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நினைவு கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச பாரதி திருவிழாவில் ஆற்றிய உரையையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.