PM Modi On NCERT Issue | ``யார் அது?’’ - என கேட்டு பிரதமர் மோடி கடும் அதிருப்தி

யார் அது?’’ - என கேட்டு பிரதமர் மோடி கடும் அதிருப்தி

'நீதித்துறையில் ஊழல்' எனும் பாடம் - அமைச்சரவையில் பிரதமர் மோடி அதிருப்தி? நீதித்துறை ஊழல் குறித்து எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற விவகாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில் “நீதித்துறை ஊழல் என்ற தலைப்பில் இடம்பெற்ற பாடம் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இது நீதித்துறையை களங்கப்படுத்தும் வகையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அந்த பாடப்பகுதியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு மற்றும் NCERT அறிவித்தன. இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் புத்தகங்களில் “இத்தகைய உள்ளடக்கத்தை யார் கண்காணிக்கிறார்கள்?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com