PM Modi News | "ஒரு கப் டீயை விட 1 ஜிபி டேட்டா விலை குறைவு" - பிரதமர் மோடி பெருமிதம்
நாட்டில் ஒரு கப் டீயை விட 1 ஜிபி டேடா விலை குறைவான விலையில் விற்கப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
டெல்லியில் இந்திய மொபைல் மாநாட்டின் 9-ஆவது அமர்வை தொடங்கி வைத்த அவர், ஒரு காலத்தில் 2G தொழில்நுட்பத்துடன் போராடிய இந்தியாவில், இன்றைக்கு 5G தொழில்நுட்பம் ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடைந்திருப்பதாக கூறினார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4G தொகுப்பை மிகப்பெரிய சாதனை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதன் மூலம் உலகில் இந்த திறனைக் கொண்ட ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியாவில் முதலீடு செய்யவும், புதுமைகளை புகுத்தவும் இதுவே சரியான தருணம் என்றும் அவர் கூறினார். சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு கட்டமைப்பில் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கான தீர்வை இந்தியா வழங்கும் என்று கூறிய பிரதமர் மோடி, நாட்டில் ஒரு ஜிபி வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு கப் டீயை விடக் குறைவு என பெருமிதம் தெரிவித்தார்.
