தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் சந்திப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி நாளை புதன்கிழமை தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தனர்.
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் சந்திப்பு
Published on

ஆசிரியர் தினத்தையொட்டி, நாளை புதன்கிழமை, தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள், புதுடெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தனர். தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை ஸதி உள்பட அனைவரும் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர். அப்போது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நிலவும் இடைவேளியை அகற்ற கல்வியாளர்கள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். கல்வி துறையில் டிஜிட்டல் மயத்தை புகுத்துமாறும், ஆசிரியர்களை பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பின்னர், பிரதமர் மோடியுடன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com