செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர்

டெல்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி இன்று தேசிய கொடியை ஏற்றினார்.
செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர்
Published on

இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1943 ஆண்டு அக்டோபர் மாதம் 21ந்தேதி, சிங்கப்பூரில் ஆசாத் இந்த் என்ற சுதந்திர இந்திய அரசு என்ற பிரகடனத்தை வெளியிட்டார். அதன் 75-வது ஆண்டை நினைவுகூறும் வகையில், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி இன்று தேசிய கொடியை ஏற்றினார். சுதந்திர இந்திய வரலாற்றில், அக்டோபர் மாதத்தில் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவது என்பது இது முதல்முறை ஆகும். வழக்கமாக சுதந்திர தினத்தில் மட்டுமே செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com