PM Modi | GST Revision | செப்டம்பர் 22 முதல்.. பிரதமர் மோடி அறிவிப்பு

x

புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் செப். 22 முதல் நடைமுறைக்கு வரும் என பிரதமர் மோடி அறிவிப்பு

பல்வேறு வரிகளை விதித்து காங்கிரஸ் அரசு மாதாந்திர பட்ஜெட்டை எப்படி எல்லாம் உயர்த்தியது என்பதை யாரும் ஒருபோதும் மறக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

டெல்லியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது பெற உள்ள ஆசிரியர்கள் மத்தியில் உரையாடிய அவர், ஆசிரியர்கள் ஒரு வலிமையான தேசத்திற்கும் அதிகாரம் பெற்ற சமூகத்திற்கும் அடித்தளம் என்று தெரிவித்தார்.

புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறிய அவர்,

புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பெரிதும் பயனடையும் என்று தெரிவித்தார்.

முந்தைய காங்கிரஸ் அரசு பல்வேறு வரிகளை விதித்து,

மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை உயர்த்தியதை யாராலும் மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்கான தொடர் சீர்திருத்தங்கள் நிற்கப் போவதில்லை என்று நாட்டு மக்களுக்கு மீண்டும் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்