PM Modi | Dogs | Country Dog | "இந்திய எல்லையை பாதுகாக்கும் பணியில் 150 நாட்டு நாய்கள்"

x

இந்திய எல்லையை பாதுகாக்கும் பணியில் 150 நாட்டு நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இந்திய நாட்டு நாய்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து , நாட்டு நாய்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படுவதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு பல வெளிநாட்டு நாய் இனங்களை தோற்கடித்து இந்திய நாட்டு நாய் இனமான ரியா, சிறந்த நாய்க்கான விருதை வென்றதை சுட்டிக்காட்டும் எல்லை பாதுகாப்பு படையினர், ராம்பூர் மற்றும் முதோல் ஆகிய வேட்டை நாய் இனங்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய எல்லையில் சுமார் 700 நாய்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்