PM Modi Cyprus Visit | சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி
இந்தியா, வெளிப்படையான பொருளாதார கொள்கையை கொண்டிருப்பதோடு, நிலையான அரசியல் சூழலையும் கொண்டுள்ளது என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவில் ஒரு தேசம், ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி வரி அமல் படுத்தப்பட்டுள்ளது என்றும், பெருநிறுவன வரி முறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்தியாவில், வர்த்தகம் செய்தவற்கு உகந்த சூழலை உருவாக்கி வைத்திருப்பதுடன், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தி இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்
இந்தியாவில் கப்பல் கட்டுமானத் துறை, விமான தயாரிப்புத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
