"பாஜகவை மக்கள் முழுமையாக நம்புகிறார்கள்" - பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் கட்சி மக்களிடம் குழப்பத்தையும், அவநம்பிக்கையையும் பரப்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
"பாஜகவை மக்கள் முழுமையாக நம்புகிறார்கள்" - பிரதமர் மோடி பேச்சு
Published on

மத்தியபிரதேசத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்பாசனத்திட்டத்தை தொடங்கி வைத்த பின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு கட்சி, மக்களையும், அவர்களின் கடின உழைப்பையும் நம்பவில்லை என்றார்...

காங்கிரஸ் கட்சி மக்களிடம் குழப்பத்தையும், அவநம்பிக்கையையும் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.. பாஜக கடந்த 4 ஆண்டுகளாக , ஏமாற்றம், பயம் ஆகியவற்றை பற்றி எதுவும் பேசாமல் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார் .

பாஜகவையும் அதன் அரசையும் மக்கள் முழுவதுமாக நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com